பழைய மாணவர்கள் சந்திப்பு

| |

பழைய மாணவர்கள் சந்திப்பு ஒவ்வொரு வருடமும் "ஆகஸ்ட் 15ம் நாள்" நம் கல்லூரியில் வைத்து நடைபெறும்.

கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு அந்த வருடம் மட்டும் சந்திப்பில் கலந்து கொண்டது தான்.

உறவுகளும் பிரிவுகளும்
வாழ்வின் வழிநெடுக
நம்மை உரசியபடி கடந்து செல்லும்.

ஆனால் நாம் அந்த பிரிவுகளை
முழுமையாக ஏற்றுக்கொண்டாலும்

கடந்து செல்லும் பிரிவுகளை திரும்பிபார்க்கும்
வாய்ப்பு அனைவருக்கும் அமைவதில்லை.

அப்படிப்பட்ட ஒரு வாய்ப்புதான் இந்த பழைய மாணவர்கள் சந்திப்பு...



வரும் ஆகஸ்ட் 15, 2011 அன்று 2009ல் வெளிவந்த மாணவர்கள் சந்திக்க ஒரு திட்டம் போடப்பட்டு உள்ளது.

அனைவருக்கும்  தகவல் சொல்லப்பட்டுள்ளது. சிலர் அலுவல் காரணமாக வர முடியாது என்றும் சிலர் சில்லறை காரணமாக வர முடியாது என்றும் கூற இன்னும் பல நண்பர்கள் "நான் நிச்சயம் வருவேன்.நாம் சந்திக்கலாம்" என்று நம்பிக்கை கொடுக்கின்றனர்.

சில தோழமைகளுக்கு தகவல் சொல்லக் கூட முடியவில்லை. இருந்தாலும் சொல்ல முயற்சிகள் நடைபெறுகிறது.

இந்த வருட சுதந்திர தினவிழாவை பழைய மாணவர்கள் சந்திப்பில் கொண்டாட கல்லூரிக்கு வருமாறு SJSCன் பழைய மாணவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வருக வருக வருக...